எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டேன்? நொந்துபோன குடும்பம் - மனம் திறந்த மோகன்!
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டதாக பரவிய வதந்திக்கு மோகன் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் மோகன்
மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இவரை மைக் மோகன் என ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள்.
பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம்,பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தார்.
ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஜய்யின் தளபதி68 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்துவிட்டதாக 90களில் சொன்னார்கள்.
எய்ட்ஸ் பாதிப்பு
அந்த செய்தி கேட்டு என்னுடைய ரசிகர்கள் பதற்றமடைந்து எனது வீட்டுக்கு வந்துவிட்டார்கள். எனக்கு மட்டுமில்லை என்னுடைய குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியாக அந்த செய்தி இருந்தது. பிறகு என்னை ஒருவர் பேட்டி எடுக்க வந்தார். அப்போது அவர் என்னிடம், எய்ட்ஸ் இல்லைனு சொல்லுங்க சார் என்று கேட்டார்.
உடனே நான், டே இது போங்கா இருக்கேடா. நீங்களே எனக்கு எய்ட்ஸ் இருக்குனு சொல்வீங்க, இல்லைனு நான் சொல்லனுமானு கேட்டேன். இதிலும் நான் ஒரு ட்ரெண்ட் செட்டராகத்தான் இருந்திருக்கிறேன். உண்மை என்னவென்று எனக்கு மட்டும்தான் தெரியும்.
என்னை தவிர்த்து எனது நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தெரியும். எனக்கு எய்ட்ஸ் என்பது உண்மையாக இருந்தால்தானே ஃபீல் பண்ண முடியும். அதனால் எனக்கு எந்த ஃபீலிங்கும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.