சில்க் ஸ்மிதா பாவம்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை நானே பார்த்தேன் - மோகன் ஓபன்டாக்!
நடிகை சில்க் ஸ்மிதா குறித்து மோகன் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் மோகன்
80ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவருடைய மயக்கும் கண்கள் மற்றும் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

புகழின் உச்சத்தில் இருந்த போதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் மைக் மோகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சில்க் அவர் நடிக்கும் கேரக்டர் மாதிரி கிடையாது.
சினிமாவில் வேணும்னா அவர் கிளாமராக நடிக்கலாம். ஆனால் அவர் ரொம்பவே நல்ல பொண்ணு. ஆரம்பத்தில் இருந்து சில்க் பல கஷ்டங்களை தாண்டி சினிமாவில் ஜெயித்திருக்காங்க. அதனால அவங்க எல்லோரிடமும் ரொம்ப பாசமா தான் பேசுவாங்க. எனக்கு அவங்கள நல்லாவே தெரியும்.
சில்க் ஸ்மிதா ஷூட்டிங்
நான் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டரை பார்த்து வியந்து போய் இருக்கிறேன். அந்த அளவிற்கு அவர் இரண்டிலும் அவ்வளவு வித்தியாசத்தை காட்டுவார். சில்க் ரொம்ப ரொம்ப நல்லவங்க. எனக்கு ஒரு விஷயம் கூட ஞாபகம் இருக்கு, சில்க் ஸ்மிதா ஷூட்டிங் என்றாலே சூட்டிங் பார்ப்பதற்காக அத்தனை பேரு வருவாங்க.

ரசிகர்கள் மட்டுமல்ல ப்ரொடியூசரில் இருந்து பைனான்ஸ்காரங்க வரைக்கும் அவ்வளவு பேரும் காத்து இருப்பாங்க. ஆனா எந்த இடத்திலும் சில்க் அலட்டிக்கவே மாட்டாங்க. ரொம்ப ரொம்ப நார்மலா பழகிட்டு இருப்பாங்க. சூட்டிங் ஸ்பாட்டில் கூட அங்கு இருக்கிற எல்லாரிடமும் சகஜமா பழகுவாங்க.
 அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே ரொம்ப கஷ்டம் தான். எனக்கும் அவங்க இல்லை என்பதை இப்பவும் ஏற்றுக்கொள்ள கஷ்டமா தான் இருக்கு என வேதனை தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    