மூஞ்சியும், உயரத்தையும் பாருங்க; மறுத்த சில்க் ஸ்மிதா - கெஞ்சிய சத்யராஜ்

Sathyaraj Silk Smitha
By Sumathi May 26, 2023 02:30 PM GMT
Report

சத்யராஜ் உடன் சில்க் ஸ்மிதா நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சில்க் ஸ்மிதா

80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டது.

மூஞ்சியும், உயரத்தையும் பாருங்க; மறுத்த சில்க் ஸ்மிதா - கெஞ்சிய சத்யராஜ் | Silk Smitha Refused To Act With Sathyaraj

கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. இவர் தற்கொலை செய்துக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிக்க மறுப்பு

ஏதேனும் ஒரு படத்தில் சில்க் ஸ்மிதா இல்லையென்றால் படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள் எப்படியாவது சில்க்கின் ஒரு பாடலை படத்துக்குள் இடம்பெறும்படி வைத்துவிடுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது இடம் இருந்தது. அதன் வரிசையில், சத்யராஜ் சில்க் ஸ்மிதாவுடன் நடிக்க ஆசைப்பட்டுள்ளார்.

மூஞ்சியும், உயரத்தையும் பாருங்க; மறுத்த சில்க் ஸ்மிதா - கெஞ்சிய சத்யராஜ் | Silk Smitha Refused To Act With Sathyaraj

ஆனால், நான் நடிக்கமாட்டேன். அவர் மூஞ்சிய பாருங்க, உயரத்தை பாருங்கள் என்னால் நடிக்க முடியாது என சில்க் கூறியுள்ளார். அதனையடுத்து, அந்தப் பட இயக்குநர் ஏன்மா அவன் பெரிய ஜமீன் தார் குடும்பத்து பையன். அவனைப்போய் கெஞ்ச வைக்கிறியேம்மா என பல விஷயங்கள் கூறி ஒத்துக்கொள்ளவைத்தாராம்.

அதன்பின், சத்யராஜின் குணநலன்களை பார்த்து இவரைப் போய் இப்படி நினைத்துவிட்டோமே என நினைத்துக்கொண்டு தொடர்ந்து அவர் படங்களில் நடித்ததாக பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.