“Who is this ‘Silk!?”.. இந்திராகாந்தி வியந்த சில்க் .. விஜயலட்சுமி சில்க் சுமிதாவாக மாறிய கதை
திரையுலகில் தான் ஒரு ராணியாக இருந்தாலும் வாழ்க்கையில் பல துயரங்களையும் , சோகங்களையும் கொண்ட தென்னகத்து மார்லின் மன்றோ என்று அழைக்கப்பட்ட சில்க் ஸ்(சு)மிதாவின் பிறந்ததினம் இன்று .
இந்தியா அப்போது நெருக்கடி நிலையில் இருந்தது அப்போது பிரதமராக இந்திர காந்தி இருந்தார் . அப்போதுதான் பொற்கோவில்லுக்கு ராணுவத்தை அனுப்பி அங்கு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளனார்கள்.
அப்போது ஊடகங்களின் கைகள் முடக்கப்பட்டது , ஆகவே பத்திரிக்கைகள் தணிக்கைசெய்த பிறகே செய்திகள் வெளியிடவேண்டும் என கடுமையான விதிகளை விதித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
இதனால் மக்களிடம் கலவரத்தை ஏற்படுத்தும் செய்திகள் சென்றடையாமல் தடுத்தார் என்று கூறினாலும், அப்போதைய காலத்தில் பெரும் ஊடகமாக இருந்த பத்திரிக்கைகளின் கைகள் கட்டப்பட்டு இருந்தது என்பதுதான் உண்மை .
இந்திராகாந்தி வியந்த சில்க்
சில்சுமிதாவின் வாழ்க்கை வரலாற்றில் ஏன் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் கருத்து வருகின்றது என்பதை நேயர்களான நீங்கள் கேட்கலாம் ? காரணம் இருக்கின்றது இருவரும் தங்கள் துறையில் எதிர்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
ஒருவர் சினிமாவில் இன்னொருவர் அரசியலில். சரி விஷயத்திற்கு வருவோம்... இந்த நெருக்கடி நிலையில் பத்திரிக்கைகள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில் இந்திரா கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. புத்தகத்தில் இருந்து தலையை எடுத்த இந்திரா காந்தி “Who is this ‘Silk!?” என கேட்டதாக ஒரு தகவல் உண்டு
இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால் அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். ஆந்திரா மாநிலத்தில் விஜயலட்சுமியாக இருந்தவள் சில்கசுமிதாவாக தென்னக திரையுலகை ஆட்சி செய்ததும் ஒரு வரலாற்று சம்பவம்தான்.
வண்டி சக்கரத்தில் தொடங்கிய பயணம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள “ ஏலூரு” என்ற பகுதியில் 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்,குடும்பவறுமை நிலைக்காரணமாக தனது படிப்பினை நான்காம் வகுப்போடு நிறுத்த வேண்டிய சோகம் அவருக்கு ஏற்பட்டது. மிக சிறியவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்ட விஜயலெட்சுமி குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்தினால் சென்னைக்கு வந்த அவர் அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடினார்.
அப்போது அவருக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது , ஆகவே ஏவி எம் நிறுவனத்திற்கு அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார் அப்போது அவரை சந்தித்த இயக்குனர் வினு சக்கரவர்த்தி தான் இயக்கிய வண்டிசக்கரம் திரைப்படத்தில் சாராய வியபாரியாக நடிக்க வாய்ப்பு வழங்கினார்.
அதில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் பெயர்தான் சில்க் அதுவே அவருக்கு திரைப்பெயராகவும் இயற்பெயராகவும் மாறிப்போனது. வண்டிசக்கரம் படத்திற்கு பிறகு சில்கசுமிதாவுக்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கின மயக்கும் கண்களும் , திராவிட நிறமும் சில்க்கினை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அதிகபடங்கள்
அதுவும் எப்படியென்றால் அன்றையகாலக்கட்டத்தில் தமிழில் ஒரு படம் வருகின்றதென்றால் அதில் சில்க்சுமிதாவின் பாடலும் இடம் பெறவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இதனால் மிகக் குறுகிய காலக்கட்டத்திலேயே 400 -க்கும் அதிகமான படங்களில் நடித்தார். பெரும்பாலான படங்களில் கவர்ச்சி நடனமே அவருக்கு வழங்கப்பட்டது . அதே சமயம் பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை , மூன்றாம் பிறை போன்ற படங்களில் தனது கவர்ச்சியினை கடந்து நடிப்பிலும் அசத்தினார்.
ஆனாலும் கவர்ச்சி ஒன்றைதான் அவருக்கு முத்திரையிட்டு வைத்தது சினிமா உலகு கவர்ச்சி நடிகையாக இருந்தகாரணத்தால் பல்வேற் நபர்களால் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து பொது வெளியில் பேசியுள்ளார். அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள் கிடையாது.
அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு. அப்படி ஒரு சமயத்தில் ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க். முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சுவரிலும், பக்கத்திலிருந்த மரக் கிளைகளிலும் பல ஆண் உருவங்கள்.
இதை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.அதே போல் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார் சில்க் , அப்போதைய தேதியில் முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேறக மறுத்தது.
ஒரு முறை படபிடிப்பு தளத்திற்கு சிவாஜி கணேசன் வந்த போது எழுந்திருக்காமல் நிற்க அது பல செய்திதாள்களில் செய்தியாக வெளியானது. அதே சமயம் ஆந்திராவில் பண்ணையார்களை எதிர்த்து போரடிய ஏழைகளுக்கு நிதியளித்து உதவியது இவரின் மற்றுமொரு முகமாகும்.
கசந்த ரீல் லைஃப்
இது சில்க்ஸ்மிதாவை திமிர் பிடித்த பெண்ணாக வெளியுலகம் காட்டினாலும் ரீல் லைஃபில் வெற்றியை எட்டினாலும், ரியல் லைஃபில் கசப்பு நிறைந்தது.
காதலோ, இல்வாழ்கையோ இவர் விரும்பியபடி நிகழவில்லை. ரஜினி முதல் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டது சில்க் ஸ்மிதாவின் பெயர். மேலும், அவரது நண்பர்கள் சிலருடன் அவருக்கு உறவு இருக்கிறது என்றும் புரளிகள் கசிந்தன.
ஆனால், சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய நண்பர்கள், சில்க் திரையில் மட்டும் தான் போல்டான பெண்மணி. நிஜத்தில் அவர் பிறருடன் பல கூச்சப்படுவார். தனிமையில் தான் இருப்பார்., அவர் ஒரு குழந்தையை போல என்று கூறினார்கள்.
சில்க் ஸ்மிதா ஒரு கட்டத்தில் திரைப்படங்கள் தயாரிக்க துவங்கினார். அந்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. ஒருக்கட்டத்தில் கவர்ச்சி பாத்திரங்களுக்கும் புதுமுகங்கள் வரத்துவங்கியதால் சில்க் ஸ்மிதாவின் மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.
இதனால், பொருளாதார ரீதியாக இக்காட்டான சூழலுக்கு தள்ளப்பட்டார் சில்க் ஸ்மிதா. இதுமட்டுமின்றி, சில்க் ஸ்மிதாவிற்கு காதல் தோல்வியும் ஏற்பட்டிருந்தது என இவரது நெருங்கிய தோழியும், நடன கலைஞருமான அனுராதா கூறி இருந்தார்.
புதிராக மாறிப்போன மரணம்
ஒருநாள் தனது தோழி அனுராதாவிற்கு கால் செய்து அவசரமாக பேச வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவரும் மறுநாள் அவரை நேரில் வந்து பார்ப்பதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால், காலம் காத்திருக்கவில்லை1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் நாள் தனது சென்னை குடியிருப்பில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு, சடலாமக கிடந்துள்ளார்.
புதிருக்கும் புனிதத்துக்கும் இடைப்பட்ட ஒன்றில் சிக்கி தவித்த சுமிதாவின் வாழ்க்கையைப் போலவே அவரது மரணமும் ஒரு புதிராகவே ரசிகர்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது..