மோகன் கடைசி வரை இதை செஞ்சதே இல்லை - பகீர் கிளப்பிய பிரபலம்!

Mohan Tamil Cinema
By Sumathi Apr 03, 2024 02:30 PM GMT
Report

மோகன் உண்மையிலேயே பெரிய மனுஷன் தான் என இயக்குநர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

நடிகர் மோகன்

மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இவரை மைக் மோகன் என ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள்.

actor mohan

பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம்,பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தார்.

மனைவியை வெளியுலகிற்கு காட்டாத மோகன்; உருகி உருகி காதலித்த நடிகை - பிரபலம் சொன்ன சீக்ரெட்!

மனைவியை வெளியுலகிற்கு காட்டாத மோகன்; உருகி உருகி காதலித்த நடிகை - பிரபலம் சொன்ன சீக்ரெட்!

இயக்குநர் பாராட்டு

ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஜய்யின் தளபதி68 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

மோகன் கடைசி வரை இதை செஞ்சதே இல்லை - பகீர் கிளப்பிய பிரபலம்! | Director Kannan Praise Actor Mohan

இந்நிலையில் இவர் குறித்து பேட்டியளித்துள்ள இயக்குநர் கண்ணன், மிகச்சிறப்பான நடிகராக திகழ்ந்த மைக் மோகன், நடிகர் திலகம் சிவாஜியைப் போல, கடைசி வரை தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்தார். மேலும், பல படங்களை இயக்க உதவியும் செய்தார்.

இவர் நினைத்து இருந்தால் தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தி இருக்கலாம். ஆனாலும் தனது சம்பளத்தை கட்டுக்குள் வைத்து, பல படங்களில் நடித்து பல இயக்குனர்களின் வாழ்க்கையை சிறக்க வைத்திருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.