மனைவியை வெளியுலகிற்கு காட்டாத மோகன்; உருகி உருகி காதலித்த நடிகை - பிரபலம் சொன்ன சீக்ரெட்!

Mohan Bayilvan Ranganathan
By Sumathi Dec 02, 2023 08:28 AM GMT
Report

காதல் திருமணம் செய்து கொண்ட மோகன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்

மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இவரை மைக் மோகன் என ரசிகர்கள் அன்போடு அழைப்பார்கள். பின் கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம்,பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தார்.

actor mohan

ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி என பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, விஜய்யின் தளபதி68 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு நாயகி மோகனை மிகவும் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் கேட்டார்.

ஜோமேட்டோ உடையில் பிரபல முன்னணி நடிகர் மோகன், என்னாச்சு இவருக்கு? - பதறும் ரசிகர்கள்!

ஜோமேட்டோ உடையில் பிரபல முன்னணி நடிகர் மோகன், என்னாச்சு இவருக்கு? - பதறும் ரசிகர்கள்!

காதல் திருமணம் 

மோகனுக்காக படத்தை விட்டுக்கொடுக்கக் கூட தயாராக இருந்தார். பலமுறை வற்புறுத்தியும் மோகன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கமலுக்கு அடுத்தபடி காதல் திரைப்படங்களில் வித்தியாசமாக நடித்து பெண் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மோகன், டிசைனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மனைவியை வெளியுலகிற்கு காட்டாத மோகன்; உருகி உருகி காதலித்த நடிகை - பிரபலம் சொன்ன சீக்ரெட்! | Actress Wish To Marry Mic Mohan

இதுவரை தனது மனைவியின் போட்டோவை அவர் வெளியிடவே இல்லை. ஏன் என்றால், சினிமா வேறு வாழ்க்கை வேறு என்ற எண்ணம் கொண்ட மோகன், குடும்பத்தை மீடியாவுக்கு காட்டியதே இல்லை. மோகன் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ அதைவிட அதிகமாக கிசுகிசுவில் சிக்கினார்.

இவர் எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கிறாரோ அந்த நடிகையுடன் கிசுகிசுக்கப்படுவார். ஏன் என்றால், எந்த நடிகையுடன் நடித்தாலும், அந்த நடிகையுடன் கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருக்கும்.