ஜோமேட்டோ உடையில் பிரபல முன்னணி நடிகர் மோகன், என்னாச்சு இவருக்கு? - பதறும் ரசிகர்கள்!
பிரபல முன்னணி நடிகர் மைக் மோகன் தற்பொழுது ஜோமேட்டோ உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மைக் மோகன்
பிரபல முன்னணி நடிகர்களில் டாப் நடிகராக வலம் வந்தவர் மோகன். இவர் பல படங்களில் நடித்துள்ளார், இவரது நடிப்பை விட இவருக்கு அமையும் பாடல்கள் அனைவரின் மனதையும் கவரும். இதனால் இவரை மைக் மோகன் என்று அழைப்பர்.

மேலும், "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ" பாடலை கேட்டாலே வெள்ளி விழா நாயகன் மோகன் முகம் அனைவரது நினைவிலும் தோன்றி விடும்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், பல நாட்கள் கழித்து இவர் ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவர் உடன் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார் இணைந்து நடித்துள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
மேலும், அந்த பதிவின் கீழ் கமெண்ட்டுகளில் ரசிகர்கள் "எங்கள் வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களோடு இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்" என்றும் நாங்களும் அவரோட பெரிய ஃபேன் தான் மேடம் என்றும் அய்யோ மோகனுக்கு என்ன ஆச்சு? ஜோமேட்டோவில் வேலைக்கு சேர்ந்து விட்டாரா? என்றும் கேட்டு வருகின்றனர்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    