பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்!

Prakash Raj Narendra Modi Festival Viral Photos
By Vidhya Senthil Feb 06, 2025 07:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் நீராடியதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகா கும்பமேளா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா திருவிழா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்! | Modi Took Holy Dip Actor Prakashraj Critics

இந்த பிரம்மாண்ட திருவிழாவில் முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல கோடி பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதுவரை திரிவேணி சங்கமத்தில் 35 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வருகிறனர்.

மகா கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ்? வைரலான photos - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

மகா கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ்? வைரலான photos - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

மேலும் பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும் புனித நீராட வருகை தருகின்றனர்.அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

  பிரதமர் மோடி 

அந்த வரிசையில் தனி விமானம் மூலம் வருகை தந்த பிரதமர் மோடி மகா கும்பமேளா நடைபெறும் இடத்தை மோட்டார் படகு மூலம் உபி முதல்வர் யோகியுடன் சேர்ந்து பார்வையிட்டார்.பின்னர் பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் நீராடினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் நீராடியதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் சுப்ரீம் தலைவர் புனித நீராடினார். இது அவர் செய்த பாவங்களுக்கான பிராய்சித்தமா?" என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.