நான் மனிதப்பிறவி இல்லை; இந்த உலகிற்கு கடவுள் தான் அனுப்பியுள்ளார் - பிரதமர் மோடி பெருமிதம்!

BJP Narendra Modi Odisha Lok Sabha Election 2024
By Swetha May 22, 2024 09:30 AM GMT
Report

நான் மனிதப் பிறவி அல்ல, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என்று மோடி கூறியுள்ளார்.

மனிதப்பிறவி 

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில் 5 கட்டங்களின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. எஞ்சிய 2 கட்டங்கள் விரைவில் நடக்க உள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

நான் மனிதப்பிறவி இல்லை; இந்த உலகிற்கு கடவுள் தான் அனுப்பியுள்ளார் - பிரதமர் மோடி பெருமிதம்! | Modi Says He Is Not Human But God Sent To Earth

அந்த வகையில் ஒடிசா மாநிலத்தை பிரதமர் மோடி பரபரப்புரையில் ஒவ்வொரு முறை பேசும்போதும் அது மிக பெரிய சர்ச்சை வெடிக்கிறது. அதன்படி, ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டது. இதை தொடர்ந்து, பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த

அவரை விட மோடி மேலானவரா? பாஜகவுக்கு திமிர் பிடித்துவிட்டது - கெஜ்ரிவால் தாக்கு!

அவரை விட மோடி மேலானவரா? பாஜகவுக்கு திமிர் பிடித்துவிட்டது - கெஜ்ரிவால் தாக்கு!

பிரதமர் மோடி 

பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். மேலும், "மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்" என தவறுதலாக கூறியதாக வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.

நான் மனிதப்பிறவி இல்லை; இந்த உலகிற்கு கடவுள் தான் அனுப்பியுள்ளார் - பிரதமர் மோடி பெருமிதம்! | Modi Says He Is Not Human But God Sent To Earth

அதில், "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மமட்டுமே கொடுக்க முடியும்" இவ்வாறு மோடி கூறினார். இந்த விவகாரம் மீண்டும் ஒரு பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.