அந்த கடவுளே எங்கள் மோடியின் பக்தர் தான் - உளறிய பாஜக வேட்பாளர் - வெடித்த சர்ச்சை
பிரச்சாரத்தில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் சுவாமியே மோடியின் பக்தர் தான் என பாஜக எம்.பி வேட்பாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் பூரி ஜெகநாத கோவில். விஷ்ணுவின் உருவான ஜெகநாதருக்காக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு அதிகளவில் மக்கள் கூட்டம் செல்வது உண்டு.
இந்த கோவிலின் மூல கடவுளான ஜெகநாதரை மோடியின் பக்தர் என பாஜக எம்.பி வேட்பாளர் பேசி பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறார். பாஜகவின் பூரி மக்களவை தொகுதி வேட்பாளரான சம்பித் பத்ரா, அண்மையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் பேசும் போது, “பூரி ஜெகந்நாதரே பிரதமர் மோடியின் பக்தர்தான்” என கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இவரின் கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பிரச்சனையின் வீரியத்தை உணர்த்த அவர், பகிரங்க மன்னிப்பை கேட்டுள்ளார். ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ள சம்பித் பத்ரா, எல்லா இடங்களிலும் பிரதமர் மோடி ஜெகந்நாதரின் தீவிர பக்தர் என்றே சொல்லி வந்தேன். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக மாற்றி கூறிவிட்டேன். உங்களுக்கும் இது புரியும் என்று எனக்கு தெரியும். இதனை பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.