அவரை விட மோடி மேலானவரா? பாஜகவுக்கு திமிர் பிடித்துவிட்டது - கெஜ்ரிவால் தாக்கு!
பாஜக அவர்களின் ஆணவத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மோடியின் பக்தர்
பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது "பூரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர்" என கூறினார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட அவர் "பூரி ஜெகநாதரின் சிறந்த பக்தர் பிரதமர் மோடி" என்றார்.

சம்பித் பத்ராவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமிர் பிடித்துவிட்டது
அப்போது பேசிய அவர் "பா.ஜ.க.வுக்கு மிகவும் திமிர் பிடித்துவிட்டது, இவர்கள் தங்களை கடவுளாகக் கருதத் தொடங்கி உள்ளனர். பிரபஞ்சத்தின் கடவுளாகக் கருதப்படுபவர் பூரி ஜெகநாதர்.

பூரி ஜெகநாதர் மோடிஜியின் பக்தர் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மோடிஜி ஜெகநாதரை விட மேலானவரா? பா.ஜ.க. அவர்களின் ஆணவத்திற்கு பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரக தானத்தை வலியுறுத்திய விழிப்புணர்வு நடைப்பயணம் IBC Tamil