நெருப்பில் எண்ணெய் ஊற்றும் உங்களை எச்சரிக்கிறேன் - மணிப்பூர் விவகாரம்..மோடி காட்டம்!!
இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உரை மீது நன்றி தெரிவித்து பேசினார்.
மோடி உரை
அப்போது அவர் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரத்தை குறித்து வைத்து வரும் குற்றம்சாட்டிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தார். அவர் பேசியதன் சில பகுதிகள் வருமாறு,
மணிப்பூர் குறித்து பேசுகிறார்கள். மணிப்பூரின் பல இடங்களிலும் இயல்பு நிலை திரும்பிவிட்டது. இது வரை அங்கு 500'க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 11 ஆயிரத்திற்கும் அதிகமான FIR பதியபட்டுள்ளது. வன்முறை குறைந்து வருகிறது.
அனைத்து இடங்களிலும் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்கிறேன். அரசு அலுவலங்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினருடன் அமைதியை நிலைநாட்ட பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றது.
நிராகரிப்பார்கள்
மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூரில் தங்கியிருந்து பிரச்னைகளை கண்டறிந்தார். ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றது. நாம் பேசிக்கொண்டிருக்கும் இன்று 2 தேசிய பேரிடர் மீட்பு குழு மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எரியும் நெருப்பில் எண்ணையை உற்ற நினைப்பவர்களை எச்சரிக்கிறேன்.
மணிப்பூரை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 முறை மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் ஒரு நாள் உங்களை மணிப்பூர் மக்கள் நிராகரிப்பார்கள்.