கடும் அமளி - சலசலப்புகளுக்கு மத்தியில் நிறைவு பெற்று நாடாளுமன்ற கூட்ட தொடர்!! ஒரு recap
18-வது முதல் மக்களவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
18-வது மக்களவை
தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்து, நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்றுள்ளார். அமைச்சரவையும் பதவியேற்ற நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24-ஆம் தேதி துவங்கி நடைபெற்றது.
சபாநாயகர் தேர்வு, எம்.பி'க்கள் பதவியேற்பு, குடியரசு தலைவர் உரை, உரைக்கு நன்றி தெரிவிக்கும் எம்.பி'க்களின் உரை போன்றவை நடைபெற்று முடிந்தது. துவங்கி முதலே ஒவ்வொன்றும் சலசலப்பு தான்.
நீண்ட ஆண்டுகள் கழித்து சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓம் பிர்லா, மீண்டும் சபாநாயகராக தேர்வாகினார். அதே போல, குடியரசு தலைவர் உரையின் போது கூட மணிப்பூர் விவகாரம் , நீட் முறைகேடு என பலவற்றைக்குறித்தும் பெறும் அமளியில் ஈடுபட்டார்கள் எதிர்க்கட்சியினர்.
எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவித்து பேசும் போது, அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை ஆளும் கட்சியின் மீதும், பிரதமர் மோடி மீதும் வைத்தார். அவர், சிவன் படத்தை மக்களவையில் காட்டி பேசும் போது கடும் எதிர்ப்புகள் உண்டானது.
அதே போல, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீண்டும் ஒரு முறை தனது அதிரடி பேச்சுக்களால் மக்களவையை அதிரவைத்தார்.
ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிராக பேசிவிட்டார் என குற்றம்சாட்டிய பாஜகவினர், கடும் அமளியில் ஈடுபட்டார்கள். நேற்று மாலை 4 மணிக்கு நாட்டின் பிரதமர் மோடி பதிலுரை பேசிய போது, மீண்டும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியும் உண்டானது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து சபாநாயர் ஓம் பிர்லா உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விதி 377ன் கீழ் மொத்தமாக 41 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டாலும், 73 ஏ வழிகாட்டுதலின் கீழ் 03 மட்டுமே அறிக்கைகள் செய்யப்பட்டன என்று கூறி, அமர்வின் போது 338 ஆவணங்கள் போடப்பட்டுள்ளதாக என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.