தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளின் வேதனை புரிகிறது - மோடி பேச்சு ; எதிர்க்கட்சிகள் கடும் அமளி

Narendra Modi
By Karthikraja Jul 02, 2024 12:06 PM GMT
Report

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் பொது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேச தொடங்கினார். பிரதமர் பேச தொடங்கும் முன்பே எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர்.

modi speech parliment

அமளிகளுக்கிடையே மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 3 வது முறையாக சேவையாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். நாங்கள் எப்படி திறம்பட பணியாற்றினோம் என்பது மக்களுக்கு தெரியும். 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. கொள்கையும் சிறந்த நிர்வாகம் மட்டுமே எங்கள் இலக்கு. தேசமே எங்களுக்கு முதன்மையானது. 

சிவன் படத்தை வைத்து பேசிய ராகுல் காந்தி - பாஜக எதிர்ப்பு ; மன்னிப்பு கேட்க கோரி அமளி

சிவன் படத்தை வைத்து பேசிய ராகுல் காந்தி - பாஜக எதிர்ப்பு ; மன்னிப்பு கேட்க கோரி அமளி

சபாநாயகர் கண்டனம்

மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த எதிர்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாக தெரிகிறது. எதிர்கட்சிகளின் தோல்வி வலி எங்களுக்கு புரிகிறது. மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்கு வாங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்து விட்டது என பேசியுள்ளார். 

loksabha speaker om birla

பிரதமர் பேசிக்கொண்டிருக்கும் பொது மணிப்பூர் மணிப்பூர் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சி எம்.பிக்களை தூண்டி விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.