ராமர் கோவில் விழாவிற்கு முன் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்?

Udhayanidhi Stalin Tamil nadu Narendra Modi
By Sumathi Jan 17, 2024 09:10 AM GMT
Report

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளார்.

விளையாட்டு போட்டி

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகிறது.

pm modi tamilnadu visit

இந்த ஆண்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் வருகின்ற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படுகிறது.

ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி விரதம் - பழம் மட்டும்தான்.. தூக்கம் இப்படித்தான்!

ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி விரதம் - பழம் மட்டும்தான்.. தூக்கம் இப்படித்தான்!

பிரதமர் வருகை

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

ராமர் கோவில் விழாவிற்கு முன் திடீரென தமிழகம் வரும் பிரதமர் மோடி - என்ன காரணம்? | Modi Is Coming To Tamil Nadu Reason

இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்.

விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.