ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி விரதம் - பழம் மட்டும்தான்.. தூக்கம் இப்படித்தான்!
ராமர் கோவிலுக்காக பிரதமர் மோடி விரதம் இருந்து வருகிறார்.
ராமர் கோவில்
ஜனவரி 22ம் தேதி, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளது.
தற்போது கோவிலில் முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவைடைந்துள்ளன. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
மோடி விரதம்
இதனையடுத்து, பிரதமர் மோடி 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளான ஜன. 22-ம் தேதியை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளன.
வாழ்வில் முதல் முறையாக தனித்துவமான உணர்வு, தெய்வீக அனுபவத்தை உணர்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது பல தலைமுறை கனவு. அதை நிறைவேற்றுவதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். 11 நாட்கள் விரதத்தை தொடங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி சொகுசு படுக்கையில் தூங்காமல் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்க உள்ளார். முன்னதான 3 நாட்களும் பழங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்ள உள்ளார். இந்த நாட்களில் அவர் சில மந்திரங்களையும் உச்சரிக்க உள்ளார். மேலும் கோவிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிலையை பிரதமர் மோடி வணங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.