பொய்களை பரப்பும் திமுகவை சேர்ந்தவர்களை சந்திக்கும் அளவுக்கு பிரதமர் மோடி அன்பானவர் - அண்ணாமலை!

Udhayanidhi Stalin Tamil nadu Narendra Modi K. Annamalai
By Jiyath Jan 05, 2024 11:00 AM GMT
Report

மற்ற பிரதமர்களை விட அதிக நிதியை தமிழகத்துக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உதயநிதி-மோடி

டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். இதனையடுத்து பேசிய உதயநிதி "தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளோம்.

பொய்களை பரப்பும் திமுகவை சேர்ந்தவர்களை சந்திக்கும் அளவுக்கு பிரதமர் மோடி அன்பானவர் - அண்ணாமலை! | Annamalai About Pm Modi Udhayanidhi Meet

வரும் 19ம் தேதி வருவதற்கு பிரதமர் மோடி ஒத்துக்கொண்டுள்ளார் என்று தெரிவித்தார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது "பிரதமர் மோடி தமிழ்நாடு மீது எப்போதும் சிறந்த மரியாதை கொண்டவர்.

அண்ணாமலை கருத்து

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்மொழியின் அழகை உலகெங்கும் பரப்பி வருகிறார். மற்ற எல்லா பிரதமர்களையும் விட அதிக நிதியை தமிழகத்துக்கு வழங்கியிருக்கிறார்.

பொய்களை பரப்பும் திமுகவை சேர்ந்தவர்களை சந்திக்கும் அளவுக்கு பிரதமர் மோடி அன்பானவர் - அண்ணாமலை! | Annamalai About Pm Modi Udhayanidhi Meet

தன்னை பற்றி பொய்களை மட்டுமே பரப்பும் தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சந்திக்கும் அளவுக்கு அவர் அன்பாக இருக்கிறார். அதனால்தான் பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர் மற்றும் ஒரு முன் மாதிரியான அரசியல்வாதி" என்று தெரிவித்துள்ளார்.