கோவை தெற்கு தொகுதியில் நான் தோல்வியடைய காரணமே அவர்கள்தான் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு!
கோவை தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டுப்போடாதவர்கள்தான் என்னை கேள்வி கேட்கின்றனர்.
வாக்களிப்பதே இல்லை
கோவை தெற்கு தொகுதியில் 90,000 பேர் ஓட்டு போடவில்லை. அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம். நாட்டில் 40 சதவீதம் மக்கள் வாக்களிப்பதே இல்லை.
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன். என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். ஆனால் போக வைப்பது அதைவிட கடினம்.
எனது சொந்த காசில்தான் அரசியல் செய்து வருகிறேன். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்.