நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி..? - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பதில்!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்காக தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இனைந்து இந்த முறை தேர்தலை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையியல், நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
எந்த தொகுதி?
அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நல்லமுறையில் சென்று கொண்டிருக்கிறது.
இன்னும் 2 நாட்களில் உங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்போது நல்ல செய்தியை பகிர்ந்து கொள்வேன். இப்போதைக்கு அதான் செய்தி" என்று தெரிவித்துள்ளார்.