பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: தரையில் அமர்ந்த அண்ணாமலை - தமிழில் பேச சொன்ன பிரதமர் மோடி!

Tamil nadu BJP Narendra Modi K. Annamalai
By Jiyath Feb 19, 2024 02:39 AM GMT
Report

தேசிய கவுன்சில் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரையில் அமர்ந்திருந்ததை பாஜகவினர் சமூக வலைதளங்களங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

கவுன்சில் கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: தரையில் அமர்ந்த அண்ணாமலை - தமிழில் பேச சொன்ன பிரதமர் மோடி! | Annamalai Sitting Floor In Bjp National Council

இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடி குறுக்கிட்டு நீங்கள் தமிழ்நாட்டுக்காரர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர்.

எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்கணும்; அந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை பாராட்டணும் - உதயநிதி ஆவேசம்!

எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்கணும்; அந்த விவகாரத்தில் ஜெயலலிதாவை பாராட்டணும் - உதயநிதி ஆவேசம்!

அண்ணாமலை        

ஆகையால் தமிழில் பேசுங்கள் என்றார். இதனையடுத்து நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சியுடன் தமிழில் பேசி முடித்தார். மேலும், ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருக்கும் அரங்கில் சிலர் தரையில் அமர்ந்திருந்தனர்.

பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: தரையில் அமர்ந்த அண்ணாமலை - தமிழில் பேச சொன்ன பிரதமர் மோடி! | Annamalai Sitting Floor In Bjp National Council

இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமர்ந்திருந்தார். இதனை பார்த்த தமிழக பாஜகவினர் பெருமிதம் பொங்க சமூக வலைதளங்களங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சிலர், இருக்கை இருந்தும் ஏன் கீழே அமர வேண்டும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.