அமைச்சர்களே ஜாக்கிரதை.. உள்ளேயே கருப்பு ஆடு இருக்கு - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்களுடன் கலந்தாய்வு செய்து பலவேறு திட்டங்கள், நிதிகள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேசினர். தற்பொழுது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமைச்சர்களை ஜாக்கிரதையாக இருக்குமாறு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
அதில் பேசிய அவர், "லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள். கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்" சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின், "உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
ரகசிய தகவல்
இதனை தொடர்ந்து, "எனக்கு இது தொடர்பாக இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள். சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக மேலே தகவல் அனுப்புகிறார்கள்.
நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார். மாநில அதிகாரத்தில் இருக்கும் சிலரே கருப்பு ஆடுகள் போல செயல்படுகிறார்கள். இதனால் முக்கியமான முடிவுகளை டாப் சீக்ரெட்டாக எடுங்கள். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் முக்கியமான முடிவுகளை முடிந்த அளவு ரகசியமாகவே எடுங்கள்" என்று எச்சரித்துள்ளார்.