மாவட்ட ஆட்சியர்கள் காலையில் முதல் வேலையாக நியூஸ் படிக்கவேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
கள ஆய்வு
தமிழகம் முழுவதும் வளர்ச்சி பணிகள் மற்றும் சட்ட ஒழுங்குமுறை குறித்து கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக் கூட்டத்தின்போது, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களை தரும்போதும், அவற்றுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டார்.
மேலும், பத்திரிகையில் இவ்வாறு வந்துள்ளதே? இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளித்ததை அடுத்து அறிவுறைகள் வழங்கியுள்ளார்.
முதல்வர்
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், "தினமும், குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் காலை பத்திரிகைகளை படிக்கவேண்டும். ஊடகங்களை தொடர்ந்து நீங்கள் பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால்தான், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சினை? என்பதை நீங்கள் உடனடியாக புரிந்துகொள்ள முடியும்.
அப்படி உங்களது மாவட்டங்களைப் பற்றி ஏதாவது செய்திகள் வந்தால், அந்த செய்திகளுக்கு உடனே பரிகாரம் காணவேண்டும். பரிகாரம் காண்பது மட்டுமல்ல, அது எந்த வகையில் பரிகாரம் காணப்பட்டிருக்கிறது என்பதை ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். அதை காலையில் முதல் பணியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.