ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் போராட்டம்.. 20 கி.மீ - க்கு ரூ.1200 -ஆக எகிறி ரேட் - பயணிகள் அதிர்ச்சி!

Tamil nadu
By Vinothini Oct 18, 2023 05:16 AM GMT
Report

தனியார் செயலியில் 20 கி.மீ - க்கு ரூ.1200 -ஆக அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்

ஓலா, ஊபர் போன்ற செயலிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், பைக் டாக்ஸிகளை தடை செய்யவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்ந்து 3-ம் நாளாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.

ola-uber-strike-rate-has-increased-in-app

இதில் நேற்று முன்தினம் சென்னை சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

ஒரு இடியாப்பத்தால் வாழ்க்கையே சிக்கலானது.. தம்பதிக்குள் தகராறு - கடைசியில் டுவிஸ்ட்!

ஒரு இடியாப்பத்தால் வாழ்க்கையே சிக்கலானது.. தம்பதிக்குள் தகராறு - கடைசியில் டுவிஸ்ட்!

விலை உயர்வு

இந்நிலையில், சுமார் 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வர் என்று ஓலா, ஊபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் செயலியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் குறைந்த அளவிலான ஓட்டுனர்களே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

ola-uber-strike-rate-has-increased-in-app

இதன் விளைவாக கட்டணம் உயர்ந்துள்ளது, போராட்டத்திற்கு முன் 20 கி.மீ தூரத்திற்கு ரூ.400 வசூலிக்கப்பட்டுவந்தது. ஆனால் இன்று ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஏற்கனவே 2 மடங்கு அதிகரித்துள்ளது, இது மேலும், அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.