ஸ்பெயின் நிறுவனங்களே...எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

M K Stalin Tamil nadu DMK Spain
By Karthick Jan 30, 2024 11:30 AM GMT
Report

ஸ்பெயின் நாடு தொழில் முறை பயபயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக..

அவர் பேசும் போது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்றார்.

mk-stalin-speech-in-investors-meet-spain

எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டி, ஆறு முறை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று கேள்வியை எழுப்பி, அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார் என்றும் அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

mk-stalin-speech-in-investors-meet-spain

அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன் பெருமிதத்துடன் தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை ஆனால், பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது என்று புகழ்ந்து, உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது என்று கூறினார்.

அனைத்து உதவிகளும்

தொடர்ந்து பேசிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் 4-வது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று எடுத்துரைத்து, இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன என மேற்கொள்ள கட்டி சில தகவல்களை தெரிவித்தார்.

திராவிட மாடல் அரசின் டார்கெட் ஒரு டிரில்லியன் - ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திராவிட மாடல் அரசின் டார்கெட் ஒரு டிரில்லியன் - ஸ்பெயின் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மேலும், தற்போது இந்தியாவில் ஸ்பானிஷ் நிறுவனங்களான கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா போன்றவை இந்தியாவில் செயல்பட்டு வருவதாக கூறி, இந்தப் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

mk-stalin-speech-in-investors-meet-spain

கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள் என்றும் அப்போது கையெழுத்தான முதலீடுகள் குறித்தும் அவர் விவரித்து பேசினார்.

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருப்பதாக கூறி, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம் என்று மாநாட்டில் பேசினார்.