உடல் நிலை சரியில்லையா..? முதல் முறையாக சொன்ன முதல்வர் முக ஸ்டாலின்..!
தமிழ்நாட்டை வளப்படுத்த நடந்தது முதலீட்டாளர் மாநாடு என முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் பங்கேற்பு
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அயலக தமிழர் திருவிழாவில் இன்று சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தாய் மண்ணிற்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டு, முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அயலகத் தமிழர் நல வாரியம் மூலமாக உங்களின் உடனடி தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என சுட்டிக்காட்டி, வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் இணைய கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது என்று கூறினார்.
உடல் நிலை..?
வெளிநாடுகளில் கைதான தமிழர்களுக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கப்படுகிறது என்று தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
மேலும், நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, தமிழ் அன்னையின் குழந்தைகள் எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்று தெரிவித்தார்.
எனக்கு உடல் நலமில்லை என சிலர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துவதாக கூறிய முக ஸ்டாலின், தமிழ்நாடு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது எனக்கு என்ன குறை? என்று கேள்வி எழுப்பினார்.