உலக தமிழர்களுக்கு அரணாக திமுக அரசு நிற்கும் - அமைச்சர் உதயநிதி உறுதி..!

Udhayanidhi Stalin Tamil nadu DMK
By Karthick Jan 11, 2024 03:50 PM GMT
Report

உலகில் வாழும் தமிழர்களுக்கு திமுக அரசு அரணாக நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அயலக தமிழர் தினம்

உலகம் முழுவதிற்கும் வாழும் தமிழர்களை கொண்டாடி, சிறப்பிக்கும் வகையில் திமுக அரசின் சார்பாக அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஏற்பட்டில் "அயலகத் தமிழர் தினம் 2024" சென்னையில் துவங்கியுள்ளது.

udhayanidhi-stalin-about-dmk-and-tamizh-people

இந்த விழாவினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக கழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ள ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம்.

அரணாக..

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உயிராக நேசித்த ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லை கருப்பொருளாக கொண்டு நடைபெறும் இந்த 2 நாள் நிகழ்வில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து அமைச்சர்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொழில்முனைவோர்கள் என அயலகத்தமிழர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழக அரசு என்றும் திகழும் என தாய்த்தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள அயலகத் தமிழர்களிடையே உரையாற்றினோம். “அயலகத் தமிழர் தினம் - 2024” சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தோம்.