துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்..? அவரே சொன்ன நச் பதில்!
துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று முதல் முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் உதயநிதி ஸ்டாலின்.
பின்னர் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது அரசு மற்றும் இளைஞரணி தொடர்பான விஷயங்களில் தீவிரமாகவும் பிசியாகவும் செயல்பட்டு வருகிறார்.
துணை முதலமைச்சர்?
இந்நிலையில் வரும் 21-ம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு 24-ம் தேதி வாக்கில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
மேலும், 28-ம் தேதி முதலமைச்சர் வெளிநாடு செல்லும் முன்பாக துணை முதலமைச்சர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம், துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருக்கப் போகிறோம்.. அவ்ளோதான்” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.