ஓய்வில் முதலமைச்சர் ; கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார் முக ஸ்டாலின்!

M K Stalin Summer Season Chief Minister of Tamil Nadu
By Swetha May 01, 2024 07:31 AM GMT
Report

கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

ஓய்வில் முதலமைச்சர்

நடப்பாண்டில் மக்களவை தேர்தல் தமிழகத்தில் கடந்த 19-ம் தேதி நிறைவடைந்தது. தேர்தலையொட்டி சுமார் ஒரு மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் வெயிலிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஓய்வில் முதலமைச்சர் ; கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார் முக ஸ்டாலின்! | Mk Stalin Playing Golf In Kodaikanal

இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் சற்று ஒய்வு பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு 5 நாள் சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அந்த வகையில், கொடைக்கானலின் பாம்பார்புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் முதலவர் தங்கியுள்ளார்.

மாலத்தீவு செல்ல இது தான் காரணமா?? முக ஸ்டாலினின் அரசியல்

மாலத்தீவு செல்ல இது தான் காரணமா?? முக ஸ்டாலினின் அரசியல்

கொடைக்கானல்

அப்போது காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்து அவர் பசுமைப் பள்ளத்தாக்கில் உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு சென்று கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார். முதல்வர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.

ஓய்வில் முதலமைச்சர் ; கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார் முக ஸ்டாலின்! | Mk Stalin Playing Golf In Kodaikanal

இதனை தொடர்ந்து, இன்னும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளதால் கொடைக்கானலில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.