மாலத்தீவு செல்ல இது தான் காரணமா?? முக ஸ்டாலினின் அரசியல்

M K Stalin Narendra Modi Maldives
By Karthick Apr 26, 2024 04:36 PM GMT
Report

தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த ஒரு மாதமாக தீவிரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

தேர்தல்

தமிழகத்தில் தேர்தல் வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில், எந்த கட்சி வெற்றி வாகை சூடப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஜூன் 4-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

mk-stalin-holiday-in-maldives-modi-counter

இன்று 2-ஆம் கட்ட தேர்தலில் இன்று (26-4-24) நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 1-ஆம் தேதி வரை தேர்தல் தொடருகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், கட்சி தலைவர்கள் ஆசுவாசப்படுத்தி கொண்டுள்ளனர்.

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் - முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் தாக்கு

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் காலை நடைப்பயிற்சியில் துவங்கி இரவு வரை தமிழ்நாட்டில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டங்களும் நடத்தி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மாலத்தீவு 

தேர்தல் தமிழகத்தில் முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அவர் வடமாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்வர் என தகவல் வெளியாகின.

mk-stalin-holiday-in-maldives-modi-counter

ஆனால்,தற்போது அவர் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்த படியே அவர் அரசு பணிகளையும் மேற்கொள்வர் என கூறப்படுகிறது. இப்பயணம் ஏப்ரல் 29 துவங்கி மே 7-ஆம் தேதி வரை தொடருகிறது. மாலத்தீவு குறித்து பெரும் சர்ச்சைகள் இந்தியா அரசியலில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

mk-stalin-holiday-in-maldives-modi-counter

பிரதமரை அனைத்து வகையிலும் எதிர்த்து வரும் முதலமைச்சர் அதன் ஒரு நீட்சியாகவே இதனை செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.