பிரதமாகிறார் மு.க.ஸ்டாலின் - தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கணிப்பு!
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
மக்களவை தேர்தல்
நாட்டின் அடுத்து ஆளும் அரசை தேர்வு செய்யும் ,மக்களவை தேர்தல் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட தேர்தல் வரும் மே 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
மொத்தமாக 95 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்த;லை முன்னிட்டு தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவை சேர்ந்த பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் மும்முரம் காட்டி வருகிறார்கள்.
பிரதமாகிறார் மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
அவர் பேசியது வருமாறு, இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்கு மு.க.ஸ்டாலின் பிரதமராகவும், சரத்பவார் ஓராண்டும், மம்தா பானர்ஜி ஓராண்டும் பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் பிரதமராக இருப்பார் என்றார்.
இந்தியா கூட்டணி சொல்வது போல், நாட்டை இப்படியெல்லாம் ஆட்சி செய்ய முடியாது என்ற அமித் ஷா, 30 ஆண்டுகளாக நிலையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
வலிமையான தலைவர் கடந்த 10 ஆண்டுகளில் கிடைத்ததன் காரணமாக தான், நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது என்ற மத்திய உள்துறை அமைச்சர்