மதுரையில் பரபரப்பு - கையில் கஞ்சா பொட்டலம் - முதலமைச்சரை காண வந்த நபர்!!
இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கையில் கஞ்சா
மக்களவை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஓய்வு எடுப்பதற்காக இன்று கொடைக்கானல் புறப்பட்டுள்ளார். மதுரைக்கு விமானத்திற்கு சென்று அங்கிருந்த சாலை வழியாக அவர் கொடைக்கானல் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில், மதுரை வந்தடைந்த அவரிடம் புகார் ஒன்றை அளிக்க தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் முற்பட்டுள்ளார். அந்த நபர், தனது கையில் கஞ்சா பொட்டலம் ஒன்றையும்வைத்திருந்துள்ளார் . தமிழக பாஜக ஓபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
புகார்
கையில் கஞ்சா பொட்டலத்தை கண்ட பாதுகாப்பு போலீசார் உடனே அவரை சுற்றிவளைத்து அங்கிருந்து அழைத்துசென்றுள்ளனர் . தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அதிகமான காரணத்தால்,. தமிழக இளைஞர்கள் மாணவர்கள் ஏழை கூலி தொழிலாளர்கள் சிறுவர்கள் முதல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.
அதன் காரணமாக, இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர், இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர் கையில் வைத்திருந்த கடிதத்தில், இந்த புகார் இடம்பெற்றுள்ளது.