திடீரென ரத்தான மாலத்தீவு டூர் - கொடைக்கானல் கிளப்பும் முதலமைச்சர் - இது தான் பிளானா??
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானல் பயணம் செல்கிறார்.
தேர்தல்
தமிழகத்தில் தேர்தல் வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில், எந்த கட்சி வெற்றி வாகை சூடப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஜூன் 4-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் காலை நடைப்பயிற்சியில் துவங்கி இரவு வரை தமிழ்நாட்டில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டங்களும் நடத்தி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் தமிழகத்தில் முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அவர் வடமாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்வர் என தகவல் வெளியாகின.
ஆனால்,அவர் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகின. தற்போது அந்த முடிவு மாற்றப்பட்ட திண்டுக்கல்லில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கொடைக்கானல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (29.04.2024) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானல் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கே தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 3-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.