முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தயாளு அம்மாள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்(92). சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.

வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே வராமல்தான் உள்ளார். இந்நிலையில், இவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை
இதனையடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, விரிவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தாயை காண மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan