சீமான் பேசுவதை கேட்கமுடியவில்லை; எப்படித்தான் அந்தப் பெண்.. டிடிவி காட்டம்
சீமான் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சீமான் பேச்சு
அ.ம.மு.க ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"சீமான் மீதான பாலியல் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோர முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றச்சாட்டு கூறியவர்களே தள்ளுபடி செய்யக் கோரினாலும் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதால் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
டிடிவி கண்டனம்
சீமான் மடியில் கனமில்லை எனில் இவ்வழக்கை எதிர்கொள்வது தான் நல்ல வழிமுறையாக இருக்கும். பெண்களையெல்லாம் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு சீமான் பேசுவது நமக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறது. எப்படித்தான் அங்கே நின்றிருந்த பெண் தாங்கிக் கொண்டார்களோ.
சீமான் பதட்டத்தில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது எல்லாருக்குமான தலைகுனிவாக இருக்கிறது. அவர் பேசுவதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.