கூகுள், ஆப்பிள் அதிகாரிகளுடன் முதல்வர் பேச்சுவார்த்தை - தமிழகத்தில் முதலீடு!
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு, கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் அதிகாரிகளை சந்தித்த அவர்,
தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்ய அந்நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்கவுள்ளன.
அமெரிக்க பயணம்
இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழகத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தின் முதலீடு செய்யுமாறு கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். தமிழகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.