இந்த 3 சட்டங்களுக்கு எதிர்ப்பு - மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

Amit Shah M K Stalin Tamil nadu
By Swetha Jun 19, 2024 03:46 AM GMT
Report

முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளர்.

சட்டங்களுக்கு எதிர்ப்பு  

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த 3 சட்டங்களுக்கு எதிர்ப்பு - மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! | Cm Mk Stalin Writes A Letter To Amit Sha

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை மாதம் முதல்

இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதை செய்யாவிட்டால்..அச்சாணி இல்லாத தேர் போல திமுக ஆட்சி முடிந்துவிடும்- ஓபிஎஸ்!

அதை செய்யாவிட்டால்..அச்சாணி இல்லாத தேர் போல திமுக ஆட்சி முடிந்துவிடும்- ஓபிஎஸ்!

ஸ்டாலின் கடிதம்

அதில், மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. 3 குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளன.

இந்த 3 சட்டங்களுக்கு எதிர்ப்பு - மத்திய உள்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! | Cm Mk Stalin Writes A Letter To Amit Sha

அனைத்து துறைகளுடனும் ஆலோசித்து அமல்படுத்த போதிய கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம்.

சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசியல் அமைப்பு 348 ஐ மீறுவது ஆகும். சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம் நடத்தி சட்டப் பாடங்களை மாற்றியமைக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.