2000 ஏக்கரில் சர்வேதச விமான நிலையம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் - எங்கு தெரியுமா?
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சி
ஜூன் 20 ஆம் தேதி முதல் தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இதில் முதன்மையானது தொழில் துறை. உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருகிறார்கள்.
ஓசூர்
இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மேலும், 2022-ம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. மின் வாகனங்கள் உற்பத்தியில் ஓசூர் முக்கிய பங்கு வகிப்பதால் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. எனவே 2,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்.
மேலும் கோவையில் அறிவிக்கப்பட்ட நூலக கட்டுமான பணி விரைவில் தொடங்கும். திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.