உரிமை தொகை.. மேல்முறையீடு செய்த பெண்களுக்கு ரூ. 1000 எப்போ கிடைக்கும்? - முதல்வர் அறிவிப்பு!
மகளிர் உரிமை தொகை பெற மேல்முறையீடு செய்த பெண்களுக்கு கிடைக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
உரிமை தொகை
தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இதில் பெண்களுக்கு 3 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில், மகளிர் உரிமை தொகை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "தகுதியுள்ள எல்லோருக்கும் உரிமைத் தொகை கிடைக்கிற வரை திராவிட மாடல் அரசின் பணி நிச்சயம் தொடரும். கடந்த மார்ச் 27-ந்தேதி சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை பற்றி பேசும் போது, ஏறத்தாழ 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் வகையில் இந்த திட்டம் அமையும் என்று நான் சொன்னேன்.
ஆனால் இன்றைக்கு 1 கோடி 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்த திட்டத்தோட மிகப்பெரிய வெற்றி. இந்த திட்டத்துக்கு பொறுப்பேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி,
அரசு அலுவலர்களோடு இந்த திட்டத்தை இதனுடைய செயல்பாடு குறித்து தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பார், களத்திலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.