உரிமை தொகை ரூ.1000 பெறாத பெண்கள்.. இந்த முறை மிஸ்ஸே ஆகாது - 2ம் கட்டம் தொடக்கம்!

M K Stalin DMK
By Vinothini Nov 08, 2023 07:24 AM GMT
Report

மகளிர் உரிமை தொகை பெறாத பெண்களுக்கு முதல்வர் மீண்டும் தொடங்கி வைக்கிறார்.

உரிமை தொகை

தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்தப் பணம் அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

magalir-urimai-thogai-2nd-phase-will-start-on-fri

இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.

ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை.. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு!

ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை.. அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு!

2ம் கட்டம்

இந்நிலையில், இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்தும் வறுமையான குடும்பத்தை சார்ந்த பலருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. இந்த மேல்முறையீடு செய்த பெண்களை தேர்வு செய்து உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

mk stalin

தற்பொழுது 2-ம் கட்டமாக மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியான நிலையில் முதல் நிகழ்ச்சியாக நாளை மறுநாள் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ளார்.