3ம் உலகப்போர் உறுதி?.. அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - என்ன காரணம்!
அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் போர்
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நடந்து வருகிறது, இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்க நாடு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்பொழுது ஈரான் நாடு நேரடியாக தலையிட்டுயுள்ளது, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது.
ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க போர் கப்பலை நோக்கி வீசப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதில் தோராயமாக 2-3 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன, இந்த தாக்குதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3ம் உலக போர்
இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் ஏற்பட்ட மோதலால் 3ம் உலகப்போர் நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது.
இது குறித்து, ஈரானின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கூறுகையில், "இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம்.
இதை செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை. இது மிகவும் வலிமையான மெசேஜ். இஸ்ரேல் நசுங்கிவிட்டது. இஸ்ரேல் பெரிய அடி வாங்கிவிட்டது. இஸ்ரேல் இனி முன்னேறவே முடியாது. இஸ்ரேல் எழுந்து வர முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தி இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.