உக்ரைன்- ரஷ்யா மோதலில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 19-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து ரஷ்யா படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவ படைத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நேற்று உக்ரைனின் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரெண்ட் ரீனாட் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.