பெண் ஓட்டிச் சென்ற கார் ; துரத்தி துரத்தி மர்ம கும்பல் செய்த கொடூரம் - பதைக்கும் காட்சிகள்!

Uttar Pradesh Social Media
By Swetha May 07, 2024 05:10 AM GMT
Report

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்தி வந்து பீர் பாட்டிலால் மர்மநபர்கள் தாக்கிய வீடியோ வலைதளங்களில் வைராகி வருகிறது.

பெண் சென்ற கார் 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நள்ளிரவில் ஒருவர் BMW காரை ஒட்டி சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம கும்பல் அந்த காரை விரட்டிச் சென்று பாட்டில்களால் தாக்க தொடங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பெண் ஓட்டிச் சென்ற கார் ; துரத்தி துரத்தி மர்ம கும்பல் செய்த கொடூரம் - பதைக்கும் காட்சிகள்! | Miscreants Throwing A Bottle At A Woman

அந்த வீடியோவில், ஒரு காரை முந்திச் சென்ற பிஎம்டபிள்யூ காரை ஒரு கும்பல் திடீரென மறித்துள்ளது. அதில் இருந்து இறங்கிய சில இளைஞர்கள் திடீரென கார் மீது பீர் பாட்டில்களை வீசத் தொடங்கினர். இதனால் பயந்து போன காரில் இருந்தவர்கள் காரை திருப்பி அங்கிருந்து தப்பியுள்ளனர். இந்த காட்சி காரின் டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.

திடீரென தடுமாறி தலைகீழாக கவிழ்ந்த கார்.. கணவன், மனைவி பலி - 4 பேர் படுகாயம்!

திடீரென தடுமாறி தலைகீழாக கவிழ்ந்த கார்.. கணவன், மனைவி பலி - 4 பேர் படுகாயம்!

பதைக்கும் காட்சிகள்

இது குறித்து பேசிய போலீஸார்," இந்த சம்பவம் ஐஎஃப்எஸ் வில்லாவுக்கு எதிரே உள்ள நாலெட்ஜ் பார்க் காவல் நிலையம் அருகே நடந்துள்ளது. அந்த பெண் ஓட்டிச் சென்ற காரை, துரத்திச் சென்ற மர்மநபர்கள், திடீரென காரை மறித்து பீர் பாட்டில்களால் தாக்கியுள்ளனர். வைரலான வீடியோ அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தோம்.

பெண் ஓட்டிச் சென்ற கார் ; துரத்தி துரத்தி மர்ம கும்பல் செய்த கொடூரம் - பதைக்கும் காட்சிகள்! | Miscreants Throwing A Bottle At A Woman

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்னர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார். முன்னதாக இதுபோல ஒரு சம்பவம் இரவு சர்ஜாபூர் சாலையில் நடந்தது. அதாவது காரில் பைக் மோதியது. ஓவர் டேக் செய்த போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால்,பைக்கில் இருந்த வாலிபர்கள் சுமார் 2 கி.மீ தூரம் காரில் சென்ற பெண்ணைத் துரத்திச் சென்று மிரட்டினார். இந்த சம்பவம் குறித்து அந்த 112-க்கு அந்த பெண் உதவி கோரினார். சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் வந்தவுடன் 2 இளைஞர்களும் தப்பியோடினர். இந்த வீடியோவும் வைரலானது.