நள்ளிரவில் நண்பர்களுடன் கார் ரேஸ்.. விபத்தில் சிக்கிய சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் - 3 பேர் படுகாயம்!
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் மகன் கார் ரேஸில் விபத்து ஏற்படுத்தியதால் பேர் படுகாயம் அடைந்ததுள்ளனர்.
கார் விபத்து
சென்னை, அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் டிஎம்எஸ் மெட்ரோ அருகே அண்ணா மேம்பாலம் நோக்கி சென்ற சொகுசு கார் அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளானது. அதில் பெங்களூருரைச் சேர்ந்த பிரபு, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பாபு ஆகியோர் படுகாயம் அடைந்ததால் அவர்களை போலீசார் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தியதில் சொகுசுகாரை அதிவேகமாக ஓட்டி வந்துவிபத்தை ஏற்படுத்தியது புரசைவாக்கம் மற்றும் திநகர் பகுதியில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் உரிமையாளர் சபாபதி ரத்தினத்தின் மகன் யோகேஸ் ரத்தினம் என்பது தெரியவந்தது.
சரவணா ஸ்டோர்ஸ் மகன்
இந்நிலையில், இவர் நண்பர்களுடன் கார் ரேஸில் ஈடுபட்டபோது அதிவேகமாக சென்றதால் விபினத்திற்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சரவணா ஸ்டோர் உரிமையாளரின் மகன் யோகேஷ் ஸ்ரீ ரத்தினம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, மனித உயிர்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய செயல் செய்தல், கவனக்குறைவாக செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், யோகேஷ் இதே காரில் கடந்த ஏப்ரல் மாதம் போக்குவரத்து விதிகளை மீறியதும் அதற்காக 500 அபராதம் விதித்ததும், அதை தற்போது வரை கட்டாததும் தெரியவந்துள்ளது. மேலும் யோகேஸ்வர் ரத்தினம் வாகனத்தை மதுபோதையில் ஓடினாரா என்றும் விசாரித்து வருகின்றனர்.