நம்ம ‘தி லெஜண்ட்’ ஹீரோ அண்ணாச்சியின் வயது எவ்வளவுன்னு தெரியுமா?

Saravanan Arul The Legend
2 வாரங்கள் முன்

“தி லெஜண்ட்”

சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள படம் “தி லெஜண்ட்”. இப்படத்தில், ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 28ம் தேதி “தி லெஜண்ட்” படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும், உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரியுள்ளது.

Saravana Arul

அண்ணாச்சியின் வயது

இந்நிலையில், லெஜண்ட் சரவணன் அருளின் வயது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சரவணன் அருள் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். மகளின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தினார்.

தற்போது ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சரவணன் அருளுக்கு வயது 51 ஆகிறதாம். இவர் 1970ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி பிறந்தாராம்.

தற்போது இத்தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... அண்ணாச்சிக்கு 51 வயசா... நம்பவே முடியலையே... என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.