கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டி வெறிச்செயல் - 4 சிறுவர்கள் கைது!
17 வயது சிறுமியை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
வெறிச்செயல்
சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் கடந்து சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக சென்ற 17 வயது சிறுமியை மிரட்டி, அவர்களுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அதில் பயந்து போன சிறுமி அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அவரை விரட்டி பிடித்து கை கால்களை கட்டி போட்டு அவர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அதனை வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
சிறுவர்கள் கைது
இதை பார்த்து அதே காட்டுப்பகுதிக்கு இருவர் வந்துள்ளனர். பின் நான்கு பேரும் சேர்ந்து அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்த அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அவர்களிடம் தப்பி ஓடிய சிறுமி வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் 4 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, 4 பேரையும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.