2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை; கர்பமாக்கிய தந்தையின் சக ஊழியர்கள் - கொடூர சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் பலாத்காரம்
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் தந்தை ஒருவர் உள்ளார். இவருக்கு 15 மற்றும் 13 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளானர். தந்தை வீட்டிற்கு வந்தபோது மூத்த மகள் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்த சிறுமியின் வயிறும் வீங்கியிருந்துள்ளது. இதுகுறித்து மகளிடம் தந்தை கேட்டபோது அவர் எதையும் கூற மறுத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த தந்தை மகளை அருகில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் சிறுமி 7.5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது "தந்தையுடன் செங்கல் சூளையில் வேலை செய்யும் சகா ஊழியர்களாக சப்பியும், சுபானும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது 13 வயது தங்கையையும் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.பின்னர் இரண்டாவது வயது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தந்தை அல்வாரில் உள்ள NEB காவல் நிலையத்தில் தனது மகள்களை சப்பி மற்றும் சுபன் என்ற இருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இருவரும் கர்ப்பமாகிவிட்டதாகவும் புகார் அளித்தார்.
தலைமறைவு
இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த NEB காவல் காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் . இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த இருவரால் சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.