சென்னையில் கொடூரம்; பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Thahir Aug 10, 2022 09:35 AM GMT
Report

சென்னையில் காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற கும்பல் ஒன்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் 

நேற்று முன்தினம் இரவு சென்னை போரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இரவு காரில் சென்றுள்ளார். ஐயப்பன்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்த போது காரை வழிமறித்த கும்பல் ஒன்று காரின் டிரைவரை சரிமாரியாக தாக்கி விரட்டி அடித்துள்ளது.

பின்னர் அந்த பெண்ணை கடத்திச் சென்ற அந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

சென்னையில் கொடூரம்; பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் | Kidnapping And Gang Rape Of Women

அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இச்சம்பம் பற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்த போரூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அதிரடி கைது 

பெண்ணை கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் அவர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.