திமுக அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
அமைச்சர் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் மீதான விசாரணை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இறுதி விசாரணையில்,அப்போது அமைச்சர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் நடைபெற்றது . தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் , சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும் செப். 11 ஆம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.