இந்தியா கூட்டணியே இருக்காது; திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது வழக்கு உள்ளது - லிஸ்ட் போட்ட அண்ணாமலை!
2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியே இருக்காது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொண்டார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்ககிளை சந்தித்து பேசினார்.
அண்ணாமலை பேசியதாவது "அமைச்சர் பொன்முடி மீது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வந்தது அது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
அவர் மீது மைமிங் வழக்கு என இன்னொரு வழக்கும் உள்ளது. அதற்கும் கூடிய விரைவில் தீர்ப்பு வர வேண்டும் எனவும் நாங்கள் காத்திருக்கிறோம். திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தியா கூட்டணியே இருக்காது
பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு மீது 2 வழக்கு, முத்துசாமி மீது 4 வழக்கு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர்கள் மீது உள்ள வழக்குகளுக்கும் தீர்ப்பு வர வேண்டும்" என்றார். மேலும் பேசிய அவர் "UPA கூட்டணி பிரிந்ததற்கு காரணம் திமுக தான். அதுமட்டுமின்றி இந்தியா கூட்டணியும் திமுகவால் தான் உடைய போகிறது.
என்னைப் பொருத்தவரை 2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியே இருக்காது. 400 எம்பிக்களை தாண்டி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.