மகளிர் உரிமை தொகை.. எப்போதான் கிடைக்கும்? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Udhayanidhi Stalin DMK
By Vinothini Oct 27, 2023 04:58 AM GMT
Report

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மேல்முறையீடு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் நேற்று காலை சாத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு அவர் கலைஞர் மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு மனுக்கள் குறித்த நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். 

மகளிர் உரிமை தொகை

இவர் இது குறித்து நிருபர்களிடம் கூறுகையில், "இதுவரை 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்களின் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அணைத்து அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சம்பவம் செய்யும் மாடுகள்.. முதியவரை முட்டித் தூக்கியதில் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

தொடர்ந்து சம்பவம் செய்யும் மாடுகள்.. முதியவரை முட்டித் தூக்கியதில் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

அமைச்சர்

விளக்கம் இதனை தொடர்ந்து, " மகளிர் உரிமை தொகை குறித்து நடவடிக்கை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும். இதில் தகுதியானவர்கள் யாரும் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தற்போது பெறப்பட்டுள்ள மனுக்களின் மீதான கள ஆய்வு முடிந்த பின்னர் புதியதாக மனு செய்ய விரும்புபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எந்தவித வன்முறையாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. தி.மு.க. அரசு சும்மா இருக்காது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.